இலங்கையில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை! வைத்தியர் அனில் ஜாசிங்க வெளிப்படுத்தியுள்ள தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவிவருவதாக தெரிவிக்கப்படும் கருத்தினை சுகாதார அமைச்சு இன்று மறுத்துள்ளது.

இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட இடங்களை தவிர்ந்து ஏனைய இடங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார்.

இந்த நிலைமை குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டுமே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, கந்தக்காடு புனர்வாழ்வு மையம், ராஜங்கனய மற்றும் வெலிகந்த உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பகுதிகளிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை என்று வைத்தியர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் பல பகுதிகளில் நோயாளிகள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லை. அது உண்மையாக இருந்தால் நாங்கள் தகவல்களை பகிரங்கப்படுத்துவோம், ”என்றார்.

எவ்வாறாயினும், PCR சோதனை நடத்தப்பட்ட பின்னரே ஒரு நோயாளிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவதாக வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்.