கொரோனா தொற்று! உலக சுகாதார அமைப்பு விடுத்திருக்கும் எச்சரிக்கை

Report Print Murali Murali in சிறப்பு

வெகு விரைவில் உலக நாடுகள் கொரோனா தொற்றின் மிகப் பெரிய இரண்டாவது அலையை எதிர்நோக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வரையில் உலக நாடுகள் கொரோனா தொற்றின் முதலாவது அலையையே எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அமைப்பின் அதிகாரியான மார்க்கிரட் ஹாரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“உலக நாடுகள் அனைத்தும் முதற்கட்ட கொரோனா அலையையே எதிர்நோக்கியுள்ளன. விரைவில் மிகப் பெரிய அலையாக கொரோனா தொற்று உருவாகும். இது ஒன்றும் பருவகால தொற்று நோயல்ல.

அமெரிக்காவில் கோடை காலத்தில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். கொரோனா தொற்று அனைத்து காலநிலைகளையும் எதிர்கொள்ள கூடியதாக இருக்கும்.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியமானது ” என அவர் மேலும் கூறியுள்ளார்.