தனது சொத்து விபரங்களை வெளியிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்!

Report Print Murali Murali in சிறப்பு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார்.

தனது சொத்து விரங்கள் குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி,

“உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும், வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகளும், 1,210.33 டொலர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும், கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.