கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட திட்டம்! நிர்மானப் பணிகள் ஆரம்பம்

Report Print Murali Murali in சிறப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புதிய முனையத்தின் கட்டுமான பணிகள் 2020 செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய முனையத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததும், ஆண்டுக்கு மேலும் 9 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளை கையாளுவதற்கு இந்த புதிய முனையம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய முனையத்தின் கட்டுமான திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுக்கு திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.