கொரோனா தொற்று! உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு
1510Shares

கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கொரோனா பாதிப்பு இருக்கும். கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், இதுகுறித்த பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

ஆரம்பத்தில் பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளும் தற்போது உயர்வை சந்தித்து வருகின்றன. தற்போது கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்கள் உணரப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் 1.7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.