ஆடை தொழிற்சாலைகளின் பணியாளர்கள் பலருக்கும் தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை!

Report Print Ajith Ajith in சிறப்பு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள பல ஆடைதொழிற்சாலைகளின் பணியாளர்கள் நாளைய பொதுத்தேர்தலில் பங்கேற்கமுடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

பணியாளர்கள் இன்று 4ம் திகதியும் நாளை மறுநாள் 6ம் திகதியும் கட்டாயமாக பணிகளுக்கு சமுகம்தரவேண்டும் என்று ஆடைதொழிற்சாலைகளின் நிர்வாகங்கள் பணித்துள்ளதாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய இணைப்பாளர் சுகத் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் வியாழக்கிழமையன்று பணிகளுக்கு திரும்பாதோருக்கு வேதனத்தில் 4000 ரூபா வரையான தொகை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகத் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 300- 400 பணியாளர்கள் ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் இவ்வாறான கஸ்டங்களுக்கு முகங்கொடுப்பதாக கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாளைய தினம் பொதுத்தேர்தலில் தமது உரிமையை துறந்துவிட பணியாளர்கள் தீர்மானித்துள்ளதாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய இணைப்பாளர் சுகத் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.