இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி!

Report Print Murali Murali in சிறப்பு

எமது சுகாதார முறைமை மீது நம்பிக்கை கொண்டிருந்த வாக்காளரக்ளுக்கு நன்றி கூறுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 71 வீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

கொரோனா தொற்றின் அச்சம் உலகில் இருந்து நீங்காத நிலையில், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை மாறியுள்ளது.

இந்நிலையில், எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது பொது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.