1947ம் ஆண்டில் இருந்து வாக்களிக்கும் 100 வயதான இலங்கையர்!

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை ஐந்து மணி வரையில் இடம்பெற்றிருந்தன.

நாடளாவிய ரீதியில் சுமார் 71 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 1947ம் ஆண்டு முதல் வாக்களிக்கும் நபர் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் திருகோணமலை மாவட்டத்தில் இன்றைய தினம் வாக்களித்துள்ளார்.

ஜோன் பிலிப் லூயிஸ் என்ற இந்த வாக்காளருக்கு தற்போது 100 வயதும் 8 மாதங்களும் ஆகின்றன. இந்நிலையில், தான் 1947ம் ஆண்டு முதல் வாக்களிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர், “நான் ஒவ்வொரு முறையும் வாக்களிக்கிறேன். வாக்களிப்பது எனது விலைமதிப்பற்ற கடமையாகும்” என கூறியுள்ளார்.