கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஓமானில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள இலங்கை தாய்!

Report Print Murali Murali in சிறப்பு

கொரோனா சவால்களுக்கு மத்தியில் ஓமானில் பணியாற்றும் இலங்கை பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியரான ருவாந்தி திலினி என்றே பெண்ணே, அறுவை சிகிச்சையின் பின்னர் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் குறித்த இலங்கை பெண்ணுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதனால் தாய் பிரசவத்திற்காக இலங்கைக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து இலங்கை தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“வைத்தியர் தஹிரா கஸ்மி, குறித்த இலங்கை பெண்ணுக்கு முக்கியமான அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் பிரசவத்தினை வெற்றிகரமாக செய்துள்ளார்.

குறித்த இலங்கை பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை வைத்தியர் தஹிரா கஸ்மி முன்னதாகவே ஒழுங்கு செய்திருந்ததாக ஓமானுக்கான இலங்கை தூதுவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த பெண் தனது மூன்று குழந்தைகளை வெற்றிகரமாக மற்றும் அமைதியான முறையில் குழந்தைகளை பிரசவிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இலங்கை தூதுவர் நன்றி கூறியுள்ளார்.

அத்துடன், நெருக்கடியான இந்த நேரத்தில் ஓமானில் இருக்கும் இலங்கையர்களை சிறப்பாக கவனித்துகொண்டமைக்கு அந்நாட்டு அரசாங்கத்திற்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.