இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி!

Report Print Murali Murali in சிறப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

84 வயதாகும் பிரணாப் முகர்ஜி வழக்கமான சோதனைக்கான மருத்துவமனை சென்றார். அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முடிவில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், பரிசோதனை மேற்கொள்ளவும் பிரணாப் முகர்ஜி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.