நான் இரட்டை குடியுரிமையை கொண்டிருக்கவில்லை! சுரேன் ராகவன்

Report Print Murali Murali in சிறப்பு

தான் இரட்டை குடியுரிமை கொண்டிருக்கவில்லை என வட மாகாண முன்னாள் ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவன் இரட்டை குடியுரிமை பெற்றவர் என சிங்கள பொது அமைப்புகள் ஒன்றியத்தின் உறுப்பினர் அளுத்கம இந்திரரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார். சுரேன் ராகவன் இரட்டை குடியுரிமை பெற்றவர் என்று எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.

அத்துடன் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்துள்ளார். அவரது குடியுரிமை பற்றி தேர்தல் ஆணைக்குழு ஆராயும் என நாங்கள் நினைக்கின்றோம் என அளுத்கம இந்திரரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, தான் இரட்டை குடியுரிமை கொண்டிருக்கவில்லை என கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

தான் ஆரம்பத்தில் கனேடிய குடியுரிமையை கொண்டிந்த போதிலும் அதனை இரத்து செய்துவிட்டதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.