பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தேவையான சட்ட அனுமதி பெற பிள்ளையான் தவறிவிட்டார்!

Report Print Murali Murali in சிறப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான், அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள இன்று கண்டியில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தேவையான சட்ட அனுமதியை பெற தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியை சந்தித்து தனமு அமைச்சு பதவியை அவர் பெற்றுக்கொள்வார் என பிள்ளையானுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தற்போது சிறையில் இருக்கும் பிள்ளையன், நடந்து முடிவடைந்த பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வதற்காக இன்று கண்டியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள தேவையான சட்ட அனுமதியை பெற்றுக்கொள்ள பிள்ளையான் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையன் தற்போது சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.