இலங்கையில் இளைஞனின் அசத்தலான கண்டுபிடிப்பு! வீட்டில் உருவான Formula racing கார்

Report Print Vethu Vethu in சிறப்பு
219Shares

இரத்தினபுரியில் இனைஞன் ஒருவர் வீட்டில் வைத்து ஓட்டப் பந்தய கார் ஒன்றை தயாரித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இசுரு சதுரங்க என்ற இளைஞனினால் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சையின் பின்னர் இசுரு மாத்தறை, மெதவத்த தொழில்துறை வித்தியாலயத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் தொழில்துறையில் பிரிவில் NvQ -4 மட்டம் வரை வெற்றிகரமாக கற்றுள்ளார்.

சிறு வயது முதல் இசுருவுக்கு மோட்டார் வாகனம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கமைய தனது கனவினை நனவாக்கியுள்ளார்.

போர்மியூலா ரேசிங் கார் ஒன்றிற்கு சமமான மோட்டார் வாகனம் ஒன்றை அவர் தனது வீட்டிலேயே தயாரித்துள்ளார்.

இதனை தயாரிப்பதற்காக முச்சக்கர வண்டி பலூன், சைக்கிள் டயர்கள் 4 மற்றும் 125 Cc சிலிண்டர் உட்பட பல பொருட்கள் பயன்படுத்தி காரினை தயாரித்துள்ளார்.

பெற்றோலில் பயணிக்கும் இந்தக் ரேசிங் கார், ஒரு லீற்றர் பெற்ரோலில் 15 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்கும்.

தந்தையின் ஓய்வூதியத்தில் வாழும் இசுருவின் குடும்பத்திற்கு போதுமான வருமானம் இருந்தால் வெற்றிகரமாக சிறந்த காரினை தயாரிக்க கூடிய திறமை உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.