கொரோனா தடுப்பூசி - அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in சிறப்பு

இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றின்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு மருந்தை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்டார். முன்னைய அரசாங்கமாக இருந்தால் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பல ஆண்டுகாலம் எடுத்திருக்கும்.

ஆனால், தன்னுடைய அரசாங்கம் இன்னும் சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது. இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்தும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.