கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வளியின் திறன் சிறந்த மட்டத்தில் இருக்கும்!

Report Print Ajith Ajith in சிறப்பு

எதிர்வரும் நாட்களில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வளியின் திறன் சிறந்த மட்டத்தில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் வளித்திறன் தர பிரிவின் மூத்த விஞ்ஞானி எச்.டி.பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

வளித்திறன் தரவுகளின்படி கொழும்பில் காற்றின் தரம் செப்டம்பர் இறுதி வரை ‘நல்ல மட்டத்தில்’ இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வளியின் திறன் மேம்படுத்துவதற்கு கடந்த வாரங்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான மழையே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "அதிக மழை எதிர்பார்க்கப்பட்டால், வளியின் தரமும் ஆரோக்கியமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

"கடந்த சில மாதங்களாக கொழும்பில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றது என்றாலும், இப்போது அது சிறப்பாக வருகிறது, எனினும் திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அது வேறுவிதமாக மாறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இரண்டு மாத கால ஊரடங்கு உத்தரவின் போது, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வளித்திறன் மேம்பட்டிருந்தது.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பில் வளிமாசு இவ்வளவு குறைந்திருந்தது இதுவே முதல்தடவையாக இருந்தது என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் வளித்திறன் தர பிரிவின் மூத்த விஞ்ஞானி எச்.டி.பிரேமசிறி தெரிவித்துள்ளார்.