சஹ்ரானை கைதுசெய்ய முடியாமல் போனது ஏன்! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசியல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்ச் 19ம் திகதி இடம்பெற்ற தேசிய புலனாய்வு கூட்டத்தில் ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற பின்னர் நாடு திரும்பியவர்கள் குறித்து ஆராயப்பட்டது.

இவ்வாறு நாடுதிரும்பியவர்கள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கும், மக்களுக்கும் ஆபத்து காணப்பட்டது, பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்பட்டன.

முஸ்லிம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவேண்டிய தேவை உட்பட அரசியல் காரணங்கள் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐந்து அரசியல்வாதிகள் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியதன் காரணமாக ஏற்பட்ட பிளவு காரணமாக என்னால் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்த முடியவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.