ஊழியர் ஒருவருக்கு கொரோனா - ஜித்தாவில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

Report Print Murali Murali in சிறப்பு
116Shares

ஜித்தாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 25ம் திகதி வரையில் துணைத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அவசர சேவைகளுக்கு பின்வரும் தொடர்புகள் மூலம் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் - info@slcgjeddah.org

கொன்சியூலர் விடயங்கள் - 0549505628

தொழிலாளர் விடயங்கள் - 0503605447