குரங்குகளுக்கான அமைச்சராக என்னை நியமியுங்கள்! டிலான் பெரேரா கோரிக்கை

Report Print Murali Murali in சிறப்பு

குரங்குகளால் விவசாயம் மற்றும் பயிர் வளர்ப்புக்கு இருக்கின்ற பாதிப்புக்களை தவிர்க்க வேண்டுமாயின், தன்னை குரங்குகளுக்கான அமைச்சராக நியமித்தால் குரங்குகளின் தொல்லைகளை தீர்ப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்காக என்னை குரங்கு அமைச்சர் என்று அழைத்தாலும் நான் வருத்தப்பட போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பதுளையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மந்திகள், குரங்குகள் உட்பட அந்த இனத்தால் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்நோக்கி வருகிறார்கள். எமது விவசாய உற்பத்திகளில் 60 வீதத்தை இந்த குரங்களும் மந்திகளும் அழிக்கின்றன.

தற்போது இந்த குரங்களும், மந்திகளும் கொழும்பை அண்மித்த பகுதிகளுக்கும் வந்து விட்டது. இப்படியே போனால் நாடாளுமன்றுக்கும் வந்துவிடும் .

இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக நான் ”மந்தி” விவகார அமைச்சராக பதவியேற்கவும் தயார் என்று கூறியுள்ளார்.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், குரங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.