இலங்கை அரசாங்கம் செய்த உறுதிப்பாட்டை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபை!

Report Print Ajith Ajith in சிறப்பு

நிலையான அபிவிருத்திக்கு இலங்கை அரசாங்கம் செய்த உறுதிப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

எவரும் பின்வாங்காத நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தமது அமைப்பு இலங்கையர்களை ஆதரிப்பதாகவும், நிலையான அபிவிருத்திக்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபை டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த டுவிட்டர் செய்திக்கு டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொரோனாவுக்கு எதிரான தனது நாட்டின் பொறுப்பை எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளது.

இது ஒரு ஒருங்கிணைந்த உள்ளூர் சுகாதார அணுகுமுறையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது என்றும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.