நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உறுப்பினராகும் இலங்கைப் பெண்

Report Print Kamel Kamel in சிறப்பு
1425Shares

இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் நியூசிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட vanushi walters என்ற பெண் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

வனுஷீ, நியூசிலாந்தின் தொழிற்கட்சியின் சார்பில் ஓக்லாண்டின் அப்பர் ஹார்பர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

தேசிய கட்சியின் ஜேக் பெஸானட்டை வீழ்த்தி வனுஷீ இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தேர்தலில் வனுஷீ 14,142 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன் பெஸானட் 12,727 வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனுஷீ, சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கிய பொறுப்பு ஒன்றை வகித்துள்ளதுடன், அவர் முன்னணி சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.