அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சட்டமா அதிபர் சமர்பித்துள்ள அறிக்கை!

Report Print Ajith Ajith in சிறப்பு
94Shares

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் சட்டமா அதிபர் தபுலா டி லிவேரா, சிங்கப்பூருக்கு தெளிவுபடுத்தும் குறிப்பை சமர்ப்பித்துள்ளார்.

இந்த தெளிவுபடுத்தும் குறிப்பு சிங்கப்பூர் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்து சட்டமா அதிபரிடமிருந்து அறிக்கை கோரியதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டமா அதிபரின் செய்தி வெளியாகியுள்ளது. மகேந்திரனின் விஷயத்தில் சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது.

அத்துடன் அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைக்கக் கோரும் ஆவணங்கள் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினால் அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த ஆவணங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டிருந்தார்.

முன்னதாக மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் மத்திய வங்கி பத்திர மோசடி தொடர்பாக மகேந்திரனை கைது செய்ய நிரந்தர மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.