இலங்கை ஒரு சிறந்த எதிர்காலம் கொண்ட இரத்தினம்! பிரித்தானிய நிதியாளர் புகழாரம்

Report Print Murali Murali in சிறப்பு
216Shares

“இலங்கை ஒரு சிறந்த எதிர்காலம் கொண்ட உண்மையான இரத்தினம்” என பிரித்தானியாவை சேர்ந்த நிதியாளரும் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினருமான நதானியேல் ரோத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி இடமாக்க இலங்கையின் பொருத்தத்தைப் பற்றி அறிய கடந்த வாரம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசினால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நதானியேல் ரோத்ஸ்சைல் (Nathaniel Rothschild), நிர்வாகத் தலைவராகவும், உலகளாவிய ஒருங்கிணைந்த உற்பத்தி நிறுவனமான வோலெக்ஸ் பி.எல்.சியின் மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.