கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள்! அரசாங்கம் அறிவிப்பு

Report Print Murali Murali in சிறப்பு
186Shares

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டக் குழுவின் தலைவர் லலித் வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி தொடர்பான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட பொதுமக்கள் கோரப்படுவார்கள் என்றும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசி இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக இலங்கை ஜனாதிபதியிடம் இன்று காலை 11 மணிக்கு ஒப்படைப்பார்.

அளவுகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.

முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும், கோவிட் ஒடுக்குமுறையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.