இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர்! இந்திய வான்பரப்பில் பறக்க அனுமதி

Report Print Murali Murali in சிறப்பு
267Shares

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனது வான்வெளியை பயன்படுத்த புதுடெல்லி மறுத்திருந்தால், பிரதமரின் வருகைக்கு இலங்கை விமான சேவையை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு மற்றொரு வழி இருந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாயன்று இந்திய வான்வெளியில் பறக்கும் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு சிறப்பு விமானத்தில் இரண்டு நாள் நீண்ட பயணத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். அவருடன் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட ஒரு உயர் மட்ட தூதுக்குழுவும் வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடனான சந்திப்புகள் அவரது விஜயத்தில் அடங்கும்.

வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சார மற்றும் சுற்றுலா உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு இம்ரான் கான் தலைமை தாங்குவார்.

இருதரப்பு விடயங்களைத் தவிர, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்கள் பரிமாறப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டு ‘வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்’பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.