ஃபாக்ஸ் நியூஸின் செய்தியாளர் ஏஞ்சலா ஹட்டியின் பேஸ்புக் பக்கத்தை இலங்கை பயனர்கள் அணுகுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
தனது பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட அவமதிப்பு மிக்க கருத்துக்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை பேஸ்புக் பயனர்கள் பலர், ஏஞ்சலா ஹட்டியின் இரண்டாவது பெயரில் (ஹட்டி) காணப்பட்டதைப் போன்ற ஒரு சிங்கள வார்த்தையைப் பயன்படுத்தி அவரது பெயரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட இலங்கை பேஸ்புக் பயனர்கள், சமூக நெறிமுறைகளை மீறியதாகக் கூறி, இலங்கையர்கள் தனது பேஸ்புக் பக்கத்தை அணுகுவதை தடைசெய்துள்ளனர்.
எவ்வாறாயினும், இலங்கை பயனர்களின் ஒரு சிறிய குழுவின் நடத்தை முழு நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளது என்று சமூக ஊடக ஆர்வலர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.