இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி.சி.ஆர்.பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி.சி.ஆர். இயந்திரம் ஒன்றைக் கையளித்துள்ளார்.
யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த பி.சி.ஆர்.இயந்திரத்தைச் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, துணைவேந்தரிடம் பி.சி.ஆர். இயந்திரத்தைக் கையளித்தார்.
நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஶ்ரீபவானந்தராஜா, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
தற்போதைய கோவிட் - 19 பெரும் தொற்று நிலமைகளைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய குறைந்தளவானவர்களுடனேயே நிகழ்வு இடம்பெற்றது.
