அமெரிக்காவில் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த முக்கிய பதவி!

Report Print Murali Murali in சிறப்பு
352Shares

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினரான பிரமிளா ஜெயபால் நம்பிக்கை தடுப்பு, வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பிரமிளா ஜெயபால், இந்த பதவி தனக்கு கிடைத்துள்ளமை மிகப் பெரிய கௌரவம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த 55 வயதான பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். 2017 முதல் இவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.