இத்தாலியில், இலங்கை தூதரகம் முன்னால் போராட்டம்!

Report Print Murali Murali in சிறப்பு
155Shares

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இத்தாலியின் மிலன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் - 19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்கள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.