ரூ.3 கோடி தங்க நகைகளுடன் வலம் வரும் இவர்

Report Print Dias Dias in ஆன்மீகம்
ரூ.3 கோடி தங்க நகைகளுடன் வலம் வரும் இவர்

உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரைச் சேர்ந்த தங்க பாபா, தன் உடலில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 11.5 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளார். இதைத் தவிர, பல்வேறு உலோகங்களிலான கடவுள் விக்ரகங்களையும் தன்னுடன் காரில் எடுத்துச் செல்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த கும்பமேளாவில் பங்கேற்ற அவர், உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆக்ராவுக்கு வந்துள்ள அவர், தனக்கும், தன்னுடைய நகைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசில் மனு கொடுத்துள்ளார்.

இதற்காக ஆக்ரா எஸ்.பி அலுவலகத்துக்கு சென்ற அவருடன், அங்கிருந்த மக்கள், 'செல்பி' எடுத்து கொண்டனர். பரேலிக்கு செல்ல விரும்புவதாகவும், போலீஸ் பாதுகாப்பு கோரியும் அவர் மனு கொடுத்துள்ளார்.

''தங்கம் என்பது கடவுளின் வடிவம்" அதை அணியும்போது, மனம் அமைதி அடைகிறது. அதனால்தான், 1972ம் ஆண்டு முதல் தங்க நகைகளை அணிய தொடங்கினேன் என கூறியுள்ளார்.

Latest Offers

Comments