புகழ்பெற்ற சித்தாண்டி மாவடி வேம்பு பத்திரகாளி அம்மன் 53வது உற்சவ நிகழ்வு

Report Print Reeron Reeron in ஆன்மீகம்
புகழ்பெற்ற சித்தாண்டி மாவடி வேம்பு பத்திரகாளி அம்மன் 53வது உற்சவ நிகழ்வு

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 53வது வருடாந்த திருச்சடங்கு உற்சவம் இன்று (30) மடைப்பெட்டி எழுந்தருளலும் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ளது.

திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய பத்திரகாளி அம்மன் ஆலய உற்சவ சடங்கு ஏழு நாட்கள் நிகழ்வுகளை கொண்டதுடன் எதிர்வரும் வைகாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை (05) பள்ளையச் சடங்கு மற்றும் தீ மிதித்தல் நிகழ்வுடன் இனிதே நிறைவடையவுள்ளது.

ஆலய சடங்கு பூஜைகள் அனைத்தும் பிரதம குரு சி.ஜீவராசா ஐயா தலைமையில் இடம்பெறுவதுடன், ஆலய உற்சவங்கள் அனைத்தும் கிராமம் சார்பாக நடைபெறுவதுடன், உற்சவ கால இரவு வேளைகளில் விழாக்குழு உபயகாரார்கள் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெற்ற மடைப்பெட்டி எழுந்தருளல் மற்றும் திருக்கதவு திறத்தல் விசேட பூசைகளைக் காண நூற்றுக் கணக்கான அடியார்கள் வருகை தந்ததுடன் அன்னையின் அருள் வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆலயம் சிறியதொரு குடிசையில் இருந்து தற்பொழுது ஆலயத்தின் கட்டட வளர்ச்சி மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு போன்ற பல்வேறு வளர்ச்சியை கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments