மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேரோட்டம்

Report Print Akshi in ஆன்மீகம்
மட்டக்களப்பு சந்திவெளி புதுப்பிள்ளையார் தேரோட்டம்

மட்டக்களப்பு புகழ் பெற்ற சந்திவெளி புதுப்பிள்ளையார் தேரோட்ட நிகழ்வானது இன்று (04) காலை மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயத்திற்கான வருடாந்த மகோற்சவமானது பதினாறு நாட்களை கொண்டதுடன் உற்சவத்தின் இறுதி நாளாகிய இன்றைய தினம் விஷேட அபிஷேகங்கள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து சித்திர தேர் ஏறி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்துள்ளார்.

நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் அடியார்கள் பக்தி சிரத்தையுடன் ஆண்கள் ஒருப்பக்கமாகவும், பெண்கள் ஒரு பக்கமாகவும் வடம்பிடித்து தேரினை இழுத்துள்ளனர்.

மகோற்சவ தினத்தின் இறுதி நாளாகிய இன்று காவடி மற்றும் அங்கப் பிரதட்சனை போன்ற நேர்த்திக்கடன்களை அடியார்கள் நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த காலங்களில் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயமானது புனரமைக்கப்பட்டு பின்னர் கடந்த மாதம் கும்பாவிஷேகம் நடைபெற்று முதலாவது உற்சவ தேரோட்டமாக இன்றைய தேரோட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற சித்திர தேரோட்ட நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments