கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!!

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்
கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!!

இன்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வாகனத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கதிர்காமம் மலை பகுதியை சேர்ந்த வாகன சாரதிக்கு முந்தி செல்ல இடமளிக்கவில்லை எனக் கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது எமது இடம் உங்களை யார் வரச் சொன்னது என தகாத வார்த்தையால் திட்டியதுடன் கத்தியை கொண்டு குத்துவதற்கு முயன்றுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதுடன், வாகனமும் சேதமடைந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may like this video

Latest Offers

Comments