நல்லூரில் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகள் தாராளம்

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்
415Shares

யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர் பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை தட்டுகளை பாவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பனை அபிவிருத்தி சபையிடம் குறைந்த விலையில் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட அர்ச்சனை தட்டுகளை குறைந்த விலையில் பெற்றுக் கொடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் யாழ் மாநகரசபை ஆணையாளர் தெரிவித்தார்.

ஆயினும் வர்த்தகர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு வழமைக்கு மாறான முறையில் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட அர்ச்சனை தட்டுக்களை தவிர்த்து பிளாஸ்டிக்கிலாலான அர்ச்சனைத் தட்டுக்களை விற்பனை செய்கின்றனர்.

பிளாஸ்ரிக் அர்ச்சனைத் தட்டுக்கள் மலிவு விலைகளில் கிடைப்பதால் கடைக்காரர்கள் அதனை விற்பனை செய்வதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.


நான்காம் நாள் யாழ் நல்லூர் திருவிழா

Comments