வாழ்கையில் இலகுவாகப் பின்பற்றக் கூடிய ஓர் ஆன்மீக சிந்தனை

Report Print Karan in ஆன்மீகம்
83Shares

இயற்கை சக்திக்கு இறை சக்தியை விட பலம் அதிகம் என்பதே எமது வாதமாகும். இருந்த போதிலும் கோவிலுக்கு செல்வதால் பயன் இல்லை என்று கூறவில்லை.

அங்கு எமது மனதை ஒரு நிலைப்படுத்தவும் அமைதிப்படுத்தவும் செல்கிறோம். அது எமக்கு கூடுதல் புண்ணிய காரியங்களை செய்யத் தூண்டும்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு அறிவுரை. கோவிலில் சிலை வடிவில் உள்ள தெய்வங்களிலும் ஒரு சக்தி உண்டு என்பது பலரது ஐதீகம். அது பொய்யென்று நாம் கூற முடியாது.

ஆனால் அதில் நாம் முழுமையான 100 வீத நம்பிக்கை வைத்துள்ளோமா? என்பது கேள்விக் குறியே.

அரை குறையாக நம்பிக்கை வைத்து, பூசை செய்து , இறைவனிடம் பல வேண்டுகோள்களை முன்வைத்தால் அது கிடைக்குமா?

அதை விட இலகுவான ஒரு வேண்டுதல் முறையை இங்கு குறிப்பிடுகிறேன். ஆதன் மூலம் ஒரளவு அருள் கிடைக்கும் என நம்ப முடியும்.

அதாவது நாம் வாரத்திற்கு இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் கோவிலுக்கு செல்கிறோம்.

முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுள் என்ற சக்திக்கு அவரது சன்னிதானத்திற்கே சென்று கை கூப்பி வணக்குகின்றோம்.

கீழே விழுந்து கும்பிடுகின்றோம். சுமார அரை மணி நெரம் செலவிடுகின்றோம். இதற்கு நேரம் ஒதுக்கி, நீராடி சுத்தமாக கோவிலுக்கு செல்கிறோம்.

கடவுளிடத்தில் முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் நாம் இத்தனை தியாகங்களையும் செய்கிறோம் என்பது உண்மை.

இந்த காலத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இத்தகைய வணக்கம் செலுத்துவதில்லை.

இத்தகைய மதிப்பு கௌரவம் வழங்குவதில்லை. அதுவும் ஒருவருடைய வீட்டிற்கே சென்று அவரை வாரத்தில் இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் கை கூப்பி கும்பிடுவதில்லை.

காலில் விழுந்து கும்பிடுவதில்லை. இத்தகைய மதிப்பு ஒரு நாட்டு ஜனாதிபதிக்கும் கொடுக்கப்படுவதில்லை. ஏன் ? ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீகவாதிக்கும் வழங்குவதில்லை.

எனவே, இவ்வுலகில் எவருக்கும் வழங்காத மிகப் பெரிய கௌரவத்தையும் வணக்கத்தையும் கோவிலில் உள்ள சிலைக்கு வழங்குவதால் நாம் அந்த தெய்வத்திடம் ஒரு சிறிய உதவியை ஒரு உரிமையாக கேட்பதில் தவறில்லை.

அப்படி வேண்டுகோள் விடுத்தால் அந்த சிறிய வேண்டுகோள் நிறைவேறி விடும் என்பது எமது நம்பிக்கை.

Comments