சீரற்ற காலநிலையால் ரணிலின் முகாம்பிகா கோயிலுக்கான விஜயம் ரத்து

Report Print Steephen Steephen in ஆன்மீகம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகா ஆலயத்தில் வழிபாடுகளுக்காக செல்லவிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த பயணத்தை ரத்து செய்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் ஆலயத்திற்கு செல்லவிருந்தார். எனினும், பிரதேசத்தில் காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் பெங்களூருவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகா ஆலயத்திற்கு செல்லவிருந்தார். மதியம் 12 மணி வரையும் சீரற்ற காலநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.