அக்குறணைக்கு ஜீசஸ் வந்தாரா? பரபரப்பைக் கிளப்பும் கடிதம்

Report Print Aasim in ஆன்மீகம்

கண்டி இனக்கலவரத்தின் பின்னர் அக்குறணைப் பிரதேசத்துக்கு ஜீசஸ் (முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி ஈசா நபி) வந்து சென்றதாக பரபரப்பான தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

அக்குறணை பிரதேசத்தில் தன்னை ஜீசஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மர்ம நபரை பல்வேறு தனிநபர்கள் சந்தித்துள்ளதுடன், இச்செய்தி அப்பிரதேசத்தில் பரபரப்பாக பரவி வருகின்றது.

அக்குறணையில் பாதிக்கப்பட்ட சில மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய குறித்த மர்ம நபர், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துச் சென்றுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

மேரியின் மகன் என்று ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் கையெழுத்திட்டு நல்லிணக்கம் தொடர்பான வேண்டுகோள் அடங்கிய கடிதம் ஒன்றையும் அவர் பொதுமக்களிடம் வழங்கியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அரபியிலும் சில வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது.

எனினும் அனைத்து மொழிகளும் அறிந்த மேரியின் குமரனுக்கு தமிழ் தெரியாமல் போனதன் மர்மம் என்னவென்று அக்குறணை முஸ்லிம்கள் கேலியாக வினாக்களை முன்வைத்துள்ளனர்.