சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி

Report Print Dias Dias in ஆன்மீகம்

சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது, இதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது.

ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம்