சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தில் ஏகாதசி ருத்ர வேள்வி ஆரம்பம்

Report Print Rusath in ஆன்மீகம்

மட்டக்களப்பு - களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தில் ஏகாதசி ருத்ர வேள்வி ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மகா சித்தர்களினால் இன்று குறித்த ஏகாதசி ருத்ர வேள்வி மிகவும் பிரம்மண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் குரல் மகா சித்தர்களின் ஏற்பாட்டினால் உலக நன்மைக்காகவும், உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும், ஈழவள நாடு மாபெரும் சிவபூமியாகவும், ஸ்வர்ண பூமியாகவும், குபேர பூமியாகவும் திகழவும் கார்த்திகை மாதம் 19ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் குறித்த வேள்வி நடைபெற்றுள்ளது.

இதில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் வருகை தந்துள்ளதோடு, வெளிநாடுகளிலுமிருந்து பலர் இந்த வேள்வியியை தரிசிக்க வருகை தந்துள்ளனர்.

குறித்த நான்கு நாட்களும் (நவம்பர் 19, 20, 21, 22) ஆறு கால பூஜைகள் நடைபெறும்.

இதில் ஸ்ரீ ஏகாதசி ருத்ர வேள்வியில் அதி சிறப்பாக வேத மந்திர தந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற சதுர்வேத பண்டிதர்களான சிவாச்சாரியார்கள், வேத உபனிக்ஷதங்களை உலகிற்கு அளிப்பதற்காக தில்லை வாழ் அந்தணர் வழியில் வந்த பல தீக்ஷிதர்களும் சித்த மரபில் வந்த பல சித்த குருமார்களும் பல ருத்ர உபாசகர்களும் சிவனடியார்களும் இணைந்து பல மந்திரங்களை ஓதுவார்கள்.

அவற்றில் ருத்ரஷக்திகளுக்குரிய மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் , மாலா மந்திரங்கள், விசேட மந்திரங்கள் , ரகசிய மந்திரங்கள் அடங்கும்.

குறித்த மந்திரங்கள் மூலமாக அக்கினியிலே ருத்ர உபனிஷத்திலே சொல்லப்பட்டதற்கு ஏற்ப பூஜைகள் நடைபெறுவதால் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து அருளையும், பொருளையும், வரங்களையும் கேட்பதற்கு முன்னமே அள்ளி கொடுக்க கூடிய வல்லமை இந்த ருத்ர வேள்விக்கு உண்டு என சொல்லப்படுகின்றது.