ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலய பிரமோற்சவ திருவிழா ஆரம்பம்

Report Print Akkash in ஆன்மீகம்

கொழும்பு, முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா பத்மாவதி ஸமேத ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலய பிரமோற்சவ திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

திருவிழா நேற்றைய தினம் காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்வரும் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இந்த விழா காலங்களில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் மூலவர், உற்சவர், விஷேட அலங்காரங்களில் காட்சியளிப்பார்கள்.

எனவே திருவிழாவில் பக்தர்கள் அனைவரையும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் அருளை பெற்று கொள்ளுமாறு ஆலய அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.