ஸ்ரீ முனியாண்டி காளிகோவிலின் வருட திருவிழா ஆரம்பம்!

Report Print Akkash in ஆன்மீகம்

கொழும்பு - கெச்சிக்கடை, ஜெம்பட்டா வீதி ஸ்ரீ முனியாண்டி காளிகோவிலின் 51ஆவது வருட திருவிழா கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஸ்ரீ முனியாண்டி காளிகோவிலின் வருடாந்த திருவிழா இன்று மாலை 7 மணியளவில் ஆரம்பமாகியதுடன், கொடிமரத்திற்கு ஆராதனை, வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களினால் கொடிமரம் நடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த கோயிலில் உள்ள முனியாண்டி சிலையானது கடந்த 50 வருட காலங்களாக காணப்படுவதாகவும், அத்தோடு அந்த சிலையானது ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியடைந்து வருவதாக பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.