யோகேஸ்வரன் எம்.பியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஐயப்பன் பூசை

Report Print Navoj in ஆன்மீகம்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஐயப்ப விரத பூசைகள் இன்று வாழைச்சேனையிலுள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதன்போது விசேட யாகம், அபிசேக பூஜைகள் இடம்பெற்று ஐயப்ப பஜனை சிறப்பான முறையில் நடைபெற்றதுடன், மண்டல பூசைகளும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பூசைகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் கல்லடி காயத்திரி பீட பிரதமகுரு சிவயோக செல்வன் தா.சாம்பசிவம் சிவாச்சாரியார், ஏறாவூர் சர்வமத ஐயப்ப யாத்திரை குழுவின் ஐயப்ப சுவாமிகள், மட்டக்களப்பு மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரை குழுவின் ஐயப்ப சுவாமிகள் மற்றும் வாழைச்சேனை உட்பட பல பகுதிகளிலும் இந்து பல ஐயப்ப சுவாமிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரை குழு, நாடாடுளுமன் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்துள்ளனர்.