தபால் அடையாள அட்டை பெறுவதற்கான இலகுவான வழி

Report Print Sujitha Sri in இலங்கை
111Shares

தபால் அடையாள அட்டை என்பது 16 வயதிற்கு கீழ்பட்ட இலங்கை பிரஜைகளுக்கு வழங்கப்படும் ஒரு ஆவணம். இது நரை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்படும் ஒரு உறுதிப்படுத்தும் ஆவணம்.

தகைமைகள்: இலங்கை பிரஜையாக இருத்தல்

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-

  1. பிரதான தபால் அலுவலகம். பிரிஸ்டல் வீதி. கொழும்பு-01
  2. நாட்டின் சகல தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களில்

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்: 50/= ரூபா பெறுமதியான முத்திரை

சேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)

  • பிரதான தபால் அலுவலகத்திற்கு வழங்கி ஒரு நாளினுள்

தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

  • விண்ணப்பதாராரின் பிறப்புச் சான்றிதழ்

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:

  • 3 1/4 x 2 1/4 அளவுடைய புகைப்படத்தின் 2 பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • ஒரு புகைப்படத்தை விண்ணப்பத்தின் உரிய பெட்டியினுள் ஒட்டி தபால் அதிபர் மற்றும் சாட்சிகள் இருவர் முன்னிலையில், கையொப்பத்தின் அரைவாசி விண்ணப்பப் படிவத்திலும் மற்றைய அரைவாசி புகைப்படத்தின் மீதிருக்குமாறும் கையொப்பமிடல் வேண்டும்.
  • மற்றைய புகைப்படத்தில் முகத்தில் படாதவாறு முழுமையான கையொப்பத்தை இடவேண்டும். (தபால் அதிபர் முன்னிலையில்)

பாடசாலை விண்ணப்பதாரர்களின விண்ணப்பப் படிவம் மற்றும் புகைப்படம் என்பன கீழே குறிப்பிடப்படும் விதத்திற்கேற்ப சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

  1. விண்ணப்பப் படிவத்தின் பிற்பக்கத்தில் சாட்சியாளர்களாக அதிபர் மற்றும் வகுப்பாசிரியர் அல்லது தபால் அதிபரிற்கு அறிமுகமான ஒருவர் கையொப்பமிடல் வேண்டும்.
  2. அடையாள அட்டையில் ஒட்டுவதற்காக சமர்ப்பிக்கப்படும் புகைப்பட பிரதியின் பிற்பக்கத்தில் அதிபரினால் அந்த மாணவனின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தப்படல் வேண்டும். (பதவி முத்திரையுடன்)

Comments