சனத்தொகை கூடிய பிரதேசங்களில்: புதியவகையில் ரயில்பஸ் சேவை

Report Print Vino in இலங்கை
256Shares

பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பேராதெனிய மற்றும் கம்பளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில்பஸ் சேவை இன்று முதல் (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சனநெரிசல் மிக்க பிரதேசங்களில் பயணிகளின் நலன் கருதி குறித்த ரயில்பஸ் சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இந்தநிலையில், திருக்கோணமலை – கல்ஓய, மட்டக்களப்பு – கல்ஓயா, சிலாபம் - புத்தளம், அனுராதபுரம் - மதவாச்சி, குருணாகலை – மஹவ – பேராதனை – கண்டி, கண்டி – கொஸ்கம ஆகிய நகரங்களுக்கு இடையில் குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

Comments