சிறிலங்கா இராணுவத்தின் காட்சிக்காக இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள்

Report Print Thayalan Thayalan in இலங்கை

புனேயில் நடைபெறும் இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும், ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள், சிறிலங்கா படையினருக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும் ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் உள்ள 2 ஆவது மராத்தி காலாட்படை பற்றாலியன் மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் சிறிலங்காவில் இருந்து சென்ற சிங்கப் படைப்பிரிவின் அணியினரும், இந்திய இராணுவத்தினரும் இணைந்து அணிவகுப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், இந்திய இராணுவத்தினரின் குர்க்கா படைப்பிரிவின் பாரம்பரிய நடனமும், சிறிலங்கா இராணுவத்தின் கண்டிய நடனமும் இடம்பெற்றன.

இந்த தொடக்க நாள் நிகழ்வில், இந்திய இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள் மற்றும் கருவிகள் சிறிலங்கா படையினருக்கு காட்சிப்படுத்தப்பட்டன.