முல்­லைத்­தீவில் டிராக்­டர் மூலம் செய்­யும் கரை­வ­லைக்­குத் தடை

Report Print Dias Dias in இலங்கை

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து உழவு இயந்­தி­ரத்­தைப் (டிராக்­டர்) பயன்­ப­டுத்தி கரை­வலை இழுப்­பதை முற்­றா­கத் தடை செய்­வ­தென நேற்­றுத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முல்­லைத்­தீவு மாவட்­டக் கடற்றொ­ழி­லா­ளர் அமைப்­பி­னர் மாவட்ட நீரி­யல் வளத்­தி­ணைக்­க­ளத்­தின் கட்­ட­டத்­தில் கரை­வலை சம்­மாட்­டி­மார்­களை அழைத்து நேற்­றுக் கூட்­டம் நடத்­தித் தீர்­மா­னம் எடுத்தனர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உழவு இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்­திக் கரை­வலை இழுப்­ப­தால் கடற்­கரை வளங்கள் அழி­வ­டைந்து செல்­கின்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது என்று பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

இந்த நிலை­யில் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரும் இந்த விட­யம் தொடர்­பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

வடக்­குக் கடற்­க­ரை­யில் உழவு இயந்­தி­ரம் மூல­மா­கக் கரை­வலை இழுப்­பது தொடர்­பில் எதிர்­வ­ரும் 27ஆம் திக­திக்கு முன்­னர் கடற்­றொ­ழில் அமைச்­சுக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­தால் இது தொடர்­பில் தெளி­வான முடிவை எடுக்­கு­மாறு சம்­மாட்­டி­மார்­க­ளி­டம் அதி­கா­ரி­கள் கோரி­னர்.

அந்த முடி­வின் அடிப்­ப­டை­யி­லேயே அடுத்த வரு­டத்­துக்­குக் இந்த கரை­வலை இழுப்­ப­வர்­க­ளுக்கு அனு­மதி கொடுப்­பதா இல்­லையா என்ற தீர்­மா­னம் கொழும்பு அர­சி­டம் இருந்து கிடைக்­கப்­பெ­றும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தவற விடாதீர்கள்: தென்­னி­லங்கைத் தீவி­ர­வா­தி­களே கொடிப் பிரச்­சி­னைக்குப் பொறுப்பு

அதிக விலைக்கு உழவு இயந்­தி­ரங்­களை வாங்­கித் தாம் தொழில் செய்­கி­றார்­கள் என­வும், தங்­கள் முத­லைக்­கூட எடுக்­காத நிலை­யில் அதைத் தடை செய்­யக்­கூ­டாது என்­றும் ஒரு சிலர் தெரி­வித்­த­னர்.

எனி­னும் பெரும்­பா­லான சம்­மாட்­டி­மார்­கள் உழ­வு­இ­யந்­தி­ரம் பயன்­ப­டுத்­தும் கரை­வ­லைத் தொழில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்­குத் தேவை­யில்லை என்று தெரி­வித்­த­னர்.

கடற்­க­ரை­யில் உள்ள இயற்கை வளங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தைக் கருத்­திற்­கொண்­டும் பெரும்­பா­லான மீன­வர்­க­ளின் கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் அடுத்த வரு­டம் தொடக்­கம் உழவு இயந்­தி­ரம் பயன்­ப­டுத்தி கரை­வலை இழுப்­பதை முற்­றாக தடை­செய்­வது என்று தீர்­மா­னம் அந்­தக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்­டது.

இங்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மும் அறிக்­கை­யும் கடற்­றொ­ழில் நீரி­யல் வளத்­து­றைத் திணைக்­க­ளம் ஊடாக மத்­திய மீன்­பிடி அமைச்சு, வடக்கு மாகாண மீன்­பிடி அமைச்சு மற்­றும் மாவட்­டத்­தின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் மாவட்­டச் செய­லர் உள்­ளிட்ட சம்­மந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்­றுப் பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர் அமைப்­பின் தலை­வர் ஜெயா தலை­மை­யில் நடை­பெற்ற இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள உத­விப்­ப­ணிப்­பா­ளர் கலிஸ்­ரன், கடற்­றொ­ழில் பரி­சோ­த­கர் மோகன்­கு­மார், நிர்­வாக உறுப்­பி­னர்­கள் மற்­றும் நலன்­வி­ரும்­பி­கள், வலை­ஞர்­ம­டம் தொடக்­கம் அளம்­பில் வரை­யான கரை­யோர சம்­மாட்­டி­கள் ஆகி­யோர் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர்.