மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு!! மீனவர்களிற்கு முக்கிய அறிவித்தல்

Report Print Dias Dias in இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாமென மாவட்ட வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனால் மீன்பிடி நடவடிக்கைககள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை, பூநொச்சிமுனை, புன்னைக்குடா, வாகரை உட்பட பல கரையோரப்பிரதேச மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் தமது படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை கரையிலிருந்து நீண்டதூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதேவேளை இம்மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பிரதி பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கெங்கும் மழை! விவசாயிகள் விதைப்பில் ஆர்வம்!

கிழக்கு மாகாணமெங்கும் அடைமழை பொழிந்து வருகிறது. மழையை நம்பி விவசாயிகள் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கான உரமானிய விநியோகத்திற்கான இறுதிக்கட்டப்பணிகள் இடம்பெற்றுள்ளன.

அடைமழையால் வீதி மற்றும் தாழ் நிலப் பிரதேசங்கள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.