பட்டப் பகலில் யாழ் கோப்பாய் வீதியில் பெண்ணிற்கு நடந்த பயங்கரம்!

Report Print Dias Dias in இலங்கை

யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பெண்ணொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்த நிலையில் குறித்த பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை கோப்பாய் இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வீதியால் மோட்டர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த திருடர்கள் அப்பெண்ணை தள்ளிவிழுத்திய நிலையில் சங்கிலியை அறுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது கிழே விழுந்த குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.