நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி! ஒரே நாளில் 9,500 பேர் கைது

Report Print Dias Dias in இலங்கை

நாடளாவிய ரீதியில் சந்தேக நபர்களாகக் கருதப்படும் மூவாயிரத்து 769 பேரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

போதை, கடத்தல், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படுபவர்களையும் இன்ன பிற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களையும் தேடும் நடவடிக்கை நேற்று இரவு நாடு முழுவதிலும் திடீரென நடத்தப்பட்டது.

இந்நடவடிக்கையால் நேற்று ஒரே நாள் இரவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தவிர, வீதியொழுங்குகளை மீறிய குற்றத்தின் பேரில் ஐயாயிரத்து 807 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.