கூட்டமைப்பின் தேர்தல் பங்கீட்டில் தொடரும் இழுபறி! நேரடி றிப்போட்

Report Print Dias Dias in இலங்கை

எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தொகு­திப் பங்­கீடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே கண்­டி­ருந்த இணக்­கப்­பா­டு­கள் நேற்று முற்­று­மு­ழு­தா­கக் குழம்­பிப்­போ­யின.

கடந்த ஞாயிற்­றுக் கிழமை நடந்த முதல் கூட்­டத்­தில் பங்­கீடு தொடர்­பில் 8-0 சத­வீ­த­மான இணக்­கப்­பாடு ஏற்­பட்­ட­தாக அனைத்­துக் கட்­சி­க­ளும் அறி­வித்­தி­ருந்­தன.

ஆனால், நேற்று நடந்த கூட்­டத்­தில் இணக்­கம் காணப்­பட்ட அந்த 80 வீதத்துக்குள்ளேயே பிரச்­சி­னை­கள் எழுந்து அனைத்­தும் குழம்­பிப் போயின. இறு­தி­யில் எந்த இணக்­க­மும் எட்­டப்­ப­டா­ம­லேயே நேற்­றைய கூட்­டம் முடி­வ­டைந்­தது.

கூட்­டம் முறை­யாக முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்­ன­தா­கவே ரெலோ மற்­றும் புளொட் அமைப்­பின் பிர­தி­நி­தி­கள் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் இந்­தக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது.

கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டம் தொடர்­பில் பேசப்­பட்­டது. ரெலோ­வும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மட்­டக்­க­ளப்பு பிர­தி­நி­தி­க­ளும் முதன்­மைப் பேச்சு வட்­டத்­துக்கு வெளியே தனி­யா­கப் பேச்சு நடத்­தி­னர்.

முடி­வில், ரெலோ­வுக்கு 2 சபை­க­ளும், புளொட்­டுக்கு ஒரு சபை­யும், எஞ்­சிய ஆறு சபை­க­ளை­யும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்கு வழங்­கு­வது என்ற முடி­வு­அ­றி­விக்­கப்­பட்­டது. ஆனால், இந்த முடிவை புளொட் எதிர்த்­தது.

ரெலோ­வும் தமக்கு வழங்­கப்­ப­டும் 2 சபை­க­ளில் மட்­டக்­க­ளப்பு மாந­க­ர­சபை அடங்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது.

அத­னைத் தர­மு­டி­யாது என்று தமிழ் அர­சுக் கட்சி நிரா­க­ரித்­து­விட்­டது. இத­னால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டம் தொடர்­பில் முடிவு எட்­டப்­ப­டா­மல் குழப்­பம் ஆரம்­ப­மா­னது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள 4 சபை­க­ளில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி தனக்கு மூன்று சபை­கள் ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது.

கரைத்­து­றைப்­பற்று, துணுக்­காய், புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை­கள் தமக்கு வேண்­டும் என்று அந்­தக் கட்சி கோரி­யது. எஞ்­சிய ஒரு சபையை ஏனைய இரண்டு கட்­சி­க­ளில் ஒன்­றுக்கு ஒதுக்­க­லாம் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது. இதற்கு அந்­தக் கட்­சி­கள் இணக்­கம் தெரி­விக்­க­வில்லை.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­மோ­கன் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­ச­சபை தமக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று கருத்­துத் தெரி­விக்­கும்­போது, புளொட் அமைப்­பி­ன­ரால், நீங்­கள் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் பேசு­கின்­றீர்­களா இல்லை ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் பேசு­கின்­றீர்­களா என்று கேட்­கப்­பட்­ட­தால், சூடான வார்த்­தை­கள் பரி­மா­றப்­பட்­டன.

கடந்த கூட்­டத்­தில் இணங்­கிக் கொண்­ட­தற்கு மாறாக யாழ். மாவட்­டத்­தில் மேலும் இரண்டு சபை­கள் தமக்கு ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று ரெலோ வலி­யு­றுத்­தி­யது.

அத்­தோடு ஏற்­க­னவே ஒதுக்­கப்­பட்­ட­வற்­றில் நெடுந்­தீ­வுப் பிர­தேச சபைக்­குப் அப­தி­லாக கர­வெட்­டி­யை­யும் அத்­தோடு நல்­லூர் அல்­லது கோப்­பா­யில் ஒன்­றை­யும் வழங்­க­வேண்­டும் என்று நேற்­றுத் தீடீர் கோரிக்கை முன்­வைத்­தது.

யாழ்ப்­பா­ணத்­தில் மூன்று சபை­க­ளைக் கோரி வந்த புளொட் நேற்­றுத் திடீ­ரென 4 சபை­க­ளைக் கோரி­யது. கோப்­பாய், உடு­வில், மானிப்­பாய், சங்­கானை சபை­களை அந்­தக் கட்சி கேட்­ட­மை­யி­னால் குழப்­பம் ஏற்­பட்­டது. கோப்­பாய், சங்­கானை சபை­க­ளைத் தர­மு­டி◌­யாது என்று தமிழ் அர­சுக் கட்சி மறுத்­து­விட்­டது.

கிளி­நொச்­சி­யில் தமிழ் அர­சுக் கட்­சிக்கே வாக்கு வங்கி உள்­ள­தால், மூன்று சபை­க­ளுக்­கும் தவி­சா­ளர்­களை இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சியே நிய­மிக்­கும் என்­றும், ஏனைய கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­களை நிய­மிப்­ப­தற்கு தயார் என்­றும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன் தெரி­வித்­துள்­ளார். இதற்­குப் பங்­கா­ளிக் கட்­சி­கள் உடன்­ப­ட­வில்லை.

வவு­னியா மாவட்­டத்­தில் புளொட் அமைப்­பும், ரெலோ­வும் ஒரே பிர­தே­ச­பை­யைக் கோரி­ய­மை­யி­னா­லும் குழப்­பம் ஏற்­பட்­டது.

இந்­தக் குழப்­பங்­கள் தொடர்ந்த நிலை­யில், மாலை 7 மணி­ய­ள­வில் கூட்­டத்­தி­லி­ருந்து ரெலோ அமைப்­பின் பிர­தி­நி­தி­க­ளும், புளொட் அமைப்­பின் பிர­தி­நி­தி­க­ளும் வெளி­யே­றிச் சென்­ற­னர்.

வவு­னி­யா­வில் ரெலோ­வின் மையக் குழுக் கூட்­டம் இருப்­ப­தா­லேயே வெளி­யே­றிச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பந்து தமிழ் அர­சுக் கட்­சி­யின் கையில்­தான் என்று கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றிச் செல்­லும்­போது, ரெலோ­வின் செய­லர் சிறி­காந்தா ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­தார்.

இந்­தக் கூட்­டத்­தில், தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சேனா­தி­ராசா, இ.சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ராசா, சி.சிவ­மோ­கன், சிறி­நே­சன் மற்­றும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளாக சத்­தி­ய­லிங்­கம், குரு­கு­ல­ராசா, பசு­ப­திப்­பிள்ளை மற்­றும் கட்­சி­யின் செய­லர் துரை­ரா­ச­சிங்­கம் உள்­ளிட்ட 12 பேரும், ரெலோ­வின் சார்­பில் கட்­சி­யின் செய­லர் சிறிக்­காந்தா, மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணம் உள்­ளிட்ட 8 பேரும் புளொட் அமைப்­பில் அதன் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்­தன், மாகாண சபை அமைச்­சர் சி.சிவ­நே­சன் உள்­ளிட்ட நால்­வர் என்று மொத்­தம் 24 பேர் கலந்­து­கொண்­ட­னர்.