உதய சூரியன் சின்னத்தில் உதயமானது தமிழர் விடுதலை கூட்டமைப்பு!

Report Print Dias Dias in இலங்கை

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உள்ளிட்ட மேலும்சில கட்சிகள் இணைந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான புரிந்துணர்வு கலந்துரையாடலொன்று யாழ்.நாச்சிமார்கோவிலடியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் செயலாளர் அனந்த சங்கரி தலைமையில் இன்று காலை இடம்பெற்றது

இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் சிவில் அமைப்புகளின் தலைவர் சிவகரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கூட்டின் கொள்கை விளக்கம்தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் சில கருத்துக்களை வெளியிட்டார்.

அத்துடன் ஏனைய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலதிக செய்திகள் - சுமி